Published : 29 Oct 2013 10:15 AM
Last Updated : 29 Oct 2013 10:15 AM

இலக்கை நோக்கி கூடங்குளம் அணுமின் நிலையம்- 20% மின்சாரம் உற்பத்தி

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் 200 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதாவது, நிர்ணயிக்கப்பட்ட 1000 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனில் 20% மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டது.

முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தெற்கு மத்திய தொகுப்புக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அணுமின் நிலையம் வர்த்தக ரீதியாக திறந்து வைக்கப்பட்ட பின்னரே அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப் பின்னர், கடந்த 22-ஆம் தேதி, (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. அன்றைய தினம் 160 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஆயத்த பணிகளுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்உற்பத்தி மீண்டும் அக்டோபர் 25- ஆம் தேதி இரவு 9.43 மணியளவில் தொடங்கப்பட்டது. அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி 188 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி என்ற இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் முதல் அணு உலையில் 20% மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x