தமிழக மீனவர்களைக் காப்பாற்றிய இலங்கை மீனவர்


தமிழக மீனவர்களைக் காப்பாற்றிய இலங்கை மீனவர்
நடுக்கடலில் பழுதடைந்த விசைப்படகில் இருந்த தமிழக மீனவர்களை, இலங்கை நெடுந்தீவு மீனவர்கள் காப்பாற்றினர்.



ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே மின்பிடித்துக்கொண்டிருந்த நம்பு சேகரன் என்பவரது விசைப்படகில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

நடுக்கடலில் படகில் இரவு முழுவதும் தத்தளித்த 4 மீனவர்களை வியாழக்கிழமை அதிகாலை அவ்வழியே நாட்டுப்படகில் வந்த நெடுந்தீவு மீனவர்கள் காப்பாற்றி, அருகே இருந்த நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர்.

பின்னர், ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரும் நெடுந்தீவு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இவர்களிடம் நெடுந்தீவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பழுதடைந்த விசைப்படகை சரி செய்த பின்னர், 4 ராமேசுவரம் மீனவர்களும் தாயகம் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x