Published : 21 Nov 2013 02:27 PM
Last Updated : 21 Nov 2013 02:27 PM

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டிசம்பர் 4-ஆம் தேதி, சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் தேர்தல் விதியை மீறியதாக வந்துள்ள புகாரை அடுத்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் மீது 48 மணி நேரத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று விடுத்துள்ள அறிக்கையில் : ஏற்காடு (தனி) சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கான அட்டவணை 4–10–2013 அன்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சேலம் மாவட்டம் முழுவதற்கும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் ஏற்காடு பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த வட்டார மேம்பாட்டு அதிகாரி கடந்த 16–ந்தேதி தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை (எடப்பாடி பழனிச்சாமி) அவருடைய வீட்டில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது.

மாவட்ட தேர்தல் அதிகாரியான சேலம் மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து அந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளார். இது தொடர்பான அறிக்கை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இதுபற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு இந்திய தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்துக்குள், தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதில் அனுப்பி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x