Published : 22 Jun 2017 08:59 AM
Last Updated : 22 Jun 2017 08:59 AM

ஆளுநர் அனுப்பிய கடித விவரங்களை தெரிவிக்க பேரவைத் தலைவர் மறுப்பு: திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு

பண பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அனுப்பிய கடிதத்தை படித்துக் காட்ட பேரவைத் தலைவர் மறுத்ததால் சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பாக நடைபெற்ற விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்:

சட்டப்பேரவையில் நடை பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக தனியார் ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் சார்பில் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தோம். அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவர், தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார். பேரவை விதி 273-ன் படி ஆளுநரிடம் இருந்து வந்துள்ள செய்தியை பேரவையில் படித்துக் காட்ட வேண்டும்.

பேரவைத் தலைவர் பி.தனபால்:

ஆளுநரிடம் நீங்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு எனக்கு ஆளுநரின் தனிச் செயலாளரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. இது எனது ஆய்வில் உள்ளது. பட்ஜெட், சட்ட முன்வடிவுகள், மானியக் கோரிக்கை தொடர்பாக ஆளுநர் தெரிவிக்கும் செய்தியை பேரவை யில் தெரிவிக்க வேண்டும். ஆளுநர் எனக்கு அனுப்பிய கடிதத்தை பேரவையில் தெரிவிக்க வேண்டிய தில்லை.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:

ஆளுநரிடம் இருந்து வரும் செய்தியை பேரவைக்கு தெரிவிக்க வேண்டும் என விதி 273 கூறுகிறது. அதனைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். ஆளுநரிடம் இருந்து தலைமைச் செயலாளருக்கும் கடிதம் வந் துள்ளது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் பேரவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும்.

பேரவைத் தலைவர்:

ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தை தலை மைச் செயலாளர் எனக்கு அனுப்பி யுள்ளார். அது எனது ஆய்வில் உள்ளது. நீங்கள் குறிப்பிடும் 273-வது விதி இந்த கடிதத்துக்கு பொருந்தாது. எனவே, அமைதியாக அமருங்கள்.

மு.க.ஸ்டாலின்:

ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதம் தொடர் பாக விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரவில்லை. விதிகளின்படி பேரவையில் அதனை தெரிவிக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டு கோள்.

பேரவைத் தலைவர்:

ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை உரிய நேரத்தில் ஆளுநருக்கு அனுப்பி வைப்பேன். அதன்பிறகு அந்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் கோரினால் பேரவையில் தெரிவிக்கிறேன்.

இதையடுத்து, ஆளுநரின் கடித விவரங்களை பேரவையில் படித்துக் காட்ட மறுப்பு தெரி வித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனை வரும் வெளிநடப்பு செய் தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப் பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘பேரவை விதிகளின்படி ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தின் விவரங்களை பேரவைக்கு தெரிவிக்குமாறு நாங் கள் வலியுறுத்தினோம். ஆனால், பேரவைத் தலைவர் சர்வாதிகாரத் துடன் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்’’ என்றார்.

வெளிநடப்பு செய்த உறுப் பினர்கள் அனைவரும் சில நிமிடங்களிலேயே பேரவைக்கு திரும்பி உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றனர்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x