Published : 24 Jun 2017 10:01 AM
Last Updated : 24 Jun 2017 10:01 AM
சட்ட நுணுக்கம், மனித உரிமைகள் மீறல் தொடர்புடையது என்பதால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பேசி முடிவெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
திருச்சி துப்பாக்கி தொழிற் சாலை நிறுவனத்தில் உள்ள பிரச்சினைகள், அதை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த விவரங் கள் எனக்கு முழுமையாக தெரியவில்லை. எனினும், மத்திய அரசு அனைத்து நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதாக கூறுவது சரியல்ல. பல ஆண்டுகளாக நஷ் டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை முழுமையாக தனி யார் மயம் ஆக்காமல், 45 அல்லது 49 சதவீதம் வரை பங்குகளை விற்பனை செய்ய முடியுமா என ஆலோசித்து வருகிறோம்.
செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத் துவமனை அமைக்க செய்யப்பட்ட பரிந்துரையை மத்திய அரசு ஏற்றதா, ஏற்றுக்கொள்ளவில்லையா என்பது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம்தான் கேட்க வேண்டும். எய்ம்ஸ் அமைவிடம் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்காத நிலையில், நான் எதுவும் கூற முடியாது. இந்த விஷயத்தில் மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் முடிவு
பல காரணங்களால் இந்த விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டுள் ளது. ஆனாலும், தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரை வில் வெளியிடும். இதை மது ரைக்கு கொண்டு செல்ல பாஜகவோ, வேறு சில கட்சிகளோ முயற்சிப்பதாக கூறலாம். யார் வேண்டுமானாலும், தங்களது ஊருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கேட்கலாம். அதில் தவறில்லை. ஆனால், தமிழக அரசு, மத்திய அரசு, மத்திய தொழில்நுட்பக் குழுவினர் கலந்து பேசி, பொருத்தமான இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் முடிவை விரைவில் எடுப்பார்கள்.
திருச்சி பெல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகி றது. அவர்களைச் சார்ந்த சிறு, குறு நிறுவனங்களின் முன்னேற் றத்துக்கான திட்டங்கள் மத்திய அரசால் செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல நிலைகளில், பல கோணங் களில் நீதிமன்றம் மூலம் விசா ரணை நடத்தப்பட்டுள்ளது. குற்ற வாளிகளுக்கான கருணை மனு கூட குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அது இல்லை என்ற பிறகே சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் தண்டனைக் காலம் முடிந்துவிட்ட தால், விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளது.
இது சட்ட நுணுக்கம், மனித உரிமைகள் மீறல் தொடர்புடையது என்பதால் மாநில அரசும், மத்திய அரசும் பேசித்தான் முடிவு எடுக்க வேண்டும். தனிப்பட்ட நபராக நான் எந்த கருத்தும் கூற முடியாது.
ஜிஎஸ்டி தள்ளிப்போகாது
ஜிஎஸ்டி வரி விதிப்பை தள்ளி வைக்க முடியாது. ஜூலையில் செய்ய வேண்டிய பதிவுகள், தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை செப்டம்பரில் செய்தால் போதும் என ஏற்கெனவே 3 மாத கால அவகாசம் அளித்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT