Published : 26 Jun 2017 09:21 AM
Last Updated : 26 Jun 2017 09:21 AM
அம்மா சிமென்ட் விற்பனையை கண்காணிக்கவும், பதிவு செய்ய வும் புதிய ஒருங்கிணைந்த மென் பொருளை முதல்வர் கே.பழனி சாமி தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவன மான டான்செம்மின் தற்போதைய ஆண்டு உற்பத்தி 7 லட்சம் டன்னா கும். விற்பனை அளவு ரூ.750 கோடி யாகும். தற்போது அரியலூரில் டான்செம் நிறுவனம் 10 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட நவீன ஆலையை நிர்மாணித்து வருகிறது. இதன் மூலம் சிமென்ட் உற்பத்தி ஆண்டுக்கு 17 லட்சம் டன்னாக உயரும்.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா சிமென்ட் திட் டத்தை முன்னாள் முதல்வர் ஜெய லலிதா அறிமுகம் செய்தார். அம்மா சிமென்ட்டின் ஒருங்கி ணைப்பு பணியை டான்செம் மேற்கொண்டு வருகிறது.
வெளிச்சந்தையில் ரூ.350-க்கு ஒரு மூட்டை சிமென்ட் விற்கப்படும் நிலையில், அம்மா சிமென்ட் ரூ.190-க்கு விற்கப்படுகிறது.
இந்த சிமென்ட் திட்டத்தை மேம் படுத்தும் வகையில் ரூ.1 கோடியில் கணினி மூலம் மாநிலம் முழுவதும் நேரடி பதிவு, விற்பனை மற்றும் கண்காணிப்புக்கு ஒருங்கிணைந்த கணினி மென்பொருள் வடிவமைக் கப்பட்டுள்ளது. இந்த மென் பொருளை தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத் தார். இதன் மூலம், தமிழகம் முழுவ தும் கிடங்குகளில் இருப்பு, பயனாளிகள் விவரம், தேவை உள்ளிட்ட விவரங்களை அதிகாரி கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சிமென்ட் விற்ப னையை கண்காணிக்க ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்கு நர்கள், நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் களுக்கு ரூ.25 லட்சம் செலவில் டான்செம் நிறுவனத்தால் வாங்கப் பட்ட 65 டேப் கருவிகளையும் வழங்கினார்.
விளையாட்டு பல்கலைக்கழகம்
விளையாட்டு பல்கலைக் கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.4 கோடியே 81 லட்சத்து 20 ஆயிரத்தில் கட்டப் பட்டுள்ள நிர்வாக கட்டிட முதல் தளம், மாணவ, மாணவியருக்கான விடுதிக்கட்டிடம், துணை வேந்தர், பதிவாளர், ஆசிரியர், அலுவலர் குடியிருப்புகளையும் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இது தவிர, ரூ.7 கோடியே 48 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்படும் மாணவ, மாணவிய ருக்கான கூடுதல் வகுப்பறைகள், ஆய்வக கட்டிடம், விடுதிகட்டிடம் ஆகியவற்றுக்கான அடிக்கல்லை யும் முதல்வர் நாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT