Published : 22 Nov 2013 12:00 AM
Last Updated : 22 Nov 2013 12:00 AM

பண்டிகைக் காலங்களில் நெரிசலைத் தவிர்க்க 124 சிறப்பு ரயில்கள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, இருமுடி, தைப்பூசம், பொங்கல் ஆகிய பண்டிகைக் காலங்களில் ஏற்படக்கூடிய கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை-செங்கல்பட்டு, திருச்சி-கோவை இடையே 124 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

கோவை-செங்கல்பட்டு

கோவை-செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை (ஞாயிறு, செவ்வாய்) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06628) கோவையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.05 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். இந்த ரயில், நவம்பர் 24, 26, டிசம்பர் 1, 3, 8, 10, 15, 17, 22, 24, 29, 31, ஜனவரி 5, 7, 12,14, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு- கோவை இடையே வாரம் இருமுறை ( திங்கள், புதன்) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06627) செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கோவைக்கு செல்லும். இந்த சிறப்பு ரயில், நவம்பர் 25, 27, டிசம்பர் 2, 4, 9, 11, 16, 18, 23, 25, 30, ஜனவரி 1, 6, 8, 13, 15, 20, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

கோவை-செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை (திங்கள், வியாழன் ) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06630) கோவையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.05 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். இந்த ரயில், நவம்பர் 28, டிசம்பர் 2, 5, 9, 12, 16, 19, 23, 26, 30, ஜனவரி 2, 6, 9, 13, 16, 20, 23 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு- கோவை இடையே வாரம் இருமுறை (செவ்வாய், வெள்ளி) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06629) செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கோவைக்கு செல்லும். இந்த சிறப்பு ரயில், நவம்பர் 29, டிசம்பர் 3, 6, 10, 13, 17, 20, 24, 27, 31, ஜனவரி 3, 7, 10, 14, 17, 21, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

வாரத்தில் ஒருநாள்

கோவை-செங்கல்பட்டு இடையே வாரத்தில் ஒருநாள் (சனிக்கிழமை ) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06632) கோவையில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். இந்த ரயில், நவம்பர் 30, டிசம்பர் 7, 14, 21, 28 ஜனவரி 4 , 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு- கோவை இடையே வாரத்தில் ஒருநாள் (ஞாயிறு) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06631) செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கோவைக்கு செல்லும். இந்த சிறப்பு ரயில், டிசம்பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

திருச்சி-கோவை

திருச்சி-கோவை இடையே வாரத்தில் ஒருநாள் (வியாழக்கிழமை ) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06634) திருச்சியில் இருந்து காலை 9.15 புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில், நவம்பர் 28, டிசம்பர் 5, 12, 19, 26 ஜனவரி 2, 9, 16, 23 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் கோவை-திருச்சி இடையே வாரத்தில் ஒருநாள் (புதன்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06633) கோவையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 8.15 மணிக்கு திருச்சியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில், டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

இன்று முன்பதிவு

திருச்சி-கோவை இடையே வாரத்தில் ஒருநாள் (ஞாயிறு) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06636) திருச்சியில் இருந்து காலை 9.15 புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில், நவம்பர் 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஜனவரி 5, 12, 19, ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் கோவை-திருச்சி இடையே வாரத்தில் ஒருநாள் (வியாழக்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரயில் (டி.என்.06635) கோவையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 8.15 மணிக்கு திருச்சியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில், நவம்பர் 28, டிசம்பர் 5, 12, 19, 26 ஜனவரி 2, 9, 16, 23 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x