Published : 31 Oct 2013 05:18 AM Last Updated : 31 Oct 2013 05:18 AM
சென்னையில் மேலும் 10 பண்ணைப் பசுமை கடைகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு
வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வை சமாளிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் சென்னையில் மேலும் 10 பண்ணைப் பசுமை கடைகள் திறக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டப்பேரவையில் அவர் புதன்கிழமை தெரிவித்ததாவது: மத்திய அரசால் ஏற்பட்ட வெங்காய விலை ஏற்றத்தை சமாளிக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.60, சாம்பார் வெங்காயம் ரூ.75 முதல் ரூ.80 விரை விற்கப்படுகிறது. நவீனமயமாக்கப்பட்ட கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கும் சாம்பார் வெங்காயம் 95 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆனால் தமிழக அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தரமான பெரிய வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் ரூ.60. மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொள்முதல் அதிகரிப்பு நுகர்வோருக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக, சென்னை பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தற்போது நாளொன்றுக்கு 6 டன் பெரிய வெங்காயமும், 1 டன் சாம்பார் வெங்காயமும் விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் 26 முதல் வெங்காயம் கொள்முதல் இரட்டிப் பாக்கப்பட்டு உள்ளது. தற்போது சென்னையில் 30 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உள்ளன. காய்கறிகளின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, உடனடியாக கூடுதலாக 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளைத் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இட்லி, சாம்பார் அம்மா உணவகம் பற்றி எல்லோருக்கும் தெரியும். சாதார ணமாக ஓட்டல்களில் இட்லி, சாம்பார் சாப்பிடுவது என்றால் என்ன விலை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் தயிர்ச் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. மினரல் வாட்டரையும் ரூ.10-க்கு விற்கிறோம். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
WRITE A COMMENT