Published : 03 Dec 2013 08:22 AM
Last Updated : 03 Dec 2013 08:22 AM

ஏற்காடு இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மத்திய தொழில் பாதுகாப்பு படை, வெளிமாவட்ட மற்றும் உள்ளூர் காவலர்கள் உள்பட 2500 பேர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெருமாள் இறந்ததைய டுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் பெருமாளின் மனைவி சரோஜா போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் வெ.மாறன் மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 11 பேர் களத்தில் உள்ளனர். கட்சித் தலைவர்கள், கூட்டணி கட்சியினர் ஆகியோர் தொகுதியில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கடைசி நேர பிரச்சாரம்

திங்கள்கிழமை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் இறுதிக்கட்டமாக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறும். இதற்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆன்லைன் மூலம் கண்காணிப்பு

ஏற்காடு தொகுதியில் உள்ள 290 வாக்குச்சாவடி மையங்களில் 269 வாக்குச் சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலமாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேரடியாக வாக்குப்பதிவு மைய நடவடிக்கை யைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெப் கேமரா

ஆட்சியர் அலுவலகத்தில் வெப் கேமரா பொருத்தப் பட்டு வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் வேண்டுகோளை ஏற்று, கட்சி சார்பில் பூத் ஏஜென்ட் ஒருவர், வெப்-கேமரா மூலமான வாக்குச்சாவடி மைய நடவடிக்கையை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய காவலர்கள்

ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்க ளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியரு மான க.மகரபூஷணம் கூறியதாவது;

வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி, சுதந்திரமாக வாக்க ளிக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படை, வெளிமாவட்ட, உள்ளூர் காவலர்கள் என ஆயுதம் ஏந்திய 2500 பேர் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து காவலர்கள் தொகுதி முழுவதும் வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொடி அணிவகுப்பு

ஏற்காடு, வாழப்பாடி, கருமந் துறை உள்ளிட்ட இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு, வாக்காளர்களின் அச்சத்தை போக்கும்விதமாக, காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் ஏற்காடு தொகுதி கண்காணிப்புக்கு 17 குழுக்கள் அமைக்க அறிவுறுத்தி யது. ஆனால், எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், ஏற்காடு இடைத்தேர்தலுக்காக 100 குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ. 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்காடு தொகுதியில் உள்ள 290 வாக்குச் சாவடி மையங்க ளும் பதற்றமானவை என்பதால், வாக்குச் சாவடி மையங்கள் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளை யத்துக்குகீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்காடு தொகு திக்கு உட்பட்ட 25 ஊராட்சிகள் மிகவும் பதற்றமானவையாக அறியப் பட்டு, அங்கு 20 வாகனங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணிப்புப் பணி மேற்கொள்வர். அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x