Published : 30 Nov 2013 01:26 PM
Last Updated : 30 Nov 2013 01:26 PM
காஞ்சிபுரம் மடத்திற்கு நேரில் வந்து, காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை 8.30 மணிக்கு சங்கரமடம் திரும்பினார். அவரை சுப்பிரமணியம் சுவாமி வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்கள் கேவிகளுக்கு பதிலளித்த அவர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த வழக்கில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதே, அவர் மீதான வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்திருந்தது என சுட்டிக்காட்டினார்.
செசன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் கூட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்றார். மேலும் இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அரசின் கடமை. அதற்கு முன்னர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்து, காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும், என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT