Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM
வரும் 22-ம் தேதி முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட திறக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்து, சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றன. இவை பெரும்பாலும், அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் மட்டுமே வந்து இனப்பெருக்கம் செய் கின்றன. இந்த காலகட்டதில், அந்த பறவைகளின் சொந்த நாடுகளில் கடும் குளிர் இருக்கும் நிலையில், அதில் இருந்து தப்பிக்க அவை, வெப்ப மண்டல நாடான இந்தியாவில் வேடந்தாங்கலுக்கு வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து செல்கின்றன. இதைப் பார்க்க ஏராளமான பறவை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்க லுக்கு வருவது வழக்கம். போதிய மழை இல்லாத காரணத்தால், ஏரிக்கு போதுமான நீர் வரத்து இல்லை. அதனால் பறவைகள் வருவதும் தாமதமாகியிருந்தது. புயல் காரணமாக இப்போது ஓரளவுக்கு ஏரியில் நீரின் அளவு அதிகரித்து இருப்பதால், பறவை களின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பறவைகள் சரணாலயம் பார்வையாளர்களுக்குத் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT