சென்னை மேயர் சைதை துரைசாமி மீது மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு


சென்னை மேயர் சைதை துரைசாமி மீது மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மீது, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி மேயராக மு.க.ஸ்டாலின் இருந்த போது, ரூபாய் 292 கோடியும், மா.சுப்ரமணியன் மேயராக இருந்தபோது ரூபாய் 125 கோடியும் தணிக்கை செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாக, சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.

மேயரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மு.க.ஸ்டாலின், மா.சுப்ரமணியம் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதோடு அவர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x