Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM
ஆல மரம், அரச மரம், வேப்ப மரம், புளிய மரம் உள்ளிட்ட பல மரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்; தொல்காப்பியர் மரம் தெரியுமா?
இந்தியாவிலேயே இந்த மரம் குமரி மாவட்டத்தில் மட்டும் தான் இருக்கிறது. அதுவும் ஒரே ஒரு மரம்தான் இருக்கிறது.
நாகர்கோவிலில் இருந்து அழகியபாண்டியபுரம் செல்லும் சாலையில், ஈசாந்திமங்கலத்தில் நிற்கும் பழைமையான நீர்மருது மரத்துக்குத்தான், ‘தொல்காப்பியர் மரம்’ என பெயர் சூட்டப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
உள்ளூர்க்காரரான விவசாயி செண்பக சேகரன் பிள்ளை கூறுகையில, “இந்த நீர் மருது மரம் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. கன்னியாகுமரி பகுதியில் பிறந்த தொல்காப்பியரின் நினைவாக, சில வருஷத்துக்கு முன், வனத்துறையினர் இந்த மரத்துக்கு ‘தொல்காப்பியர் மரம்’னு பேரு வைச்சாங்க.
அப்போ இருந்து ஊரு மக்களும் சேர்ந்து பராமரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கன்னியாகுமரி மாவட்டத்திலேயே பழைமையான மரமும் இதுதான்னு சொல்றாங்க. பொதுவாகவே இந்த நீர் மருது மரங்கள் ஆற்றங்கரைகளில் தானாகவே வளர்ந்து நிற்கும். இந்த மரத்தோட உறுதியான தடியில்தான் வேளாண்மைத் தொழிலுக்கான உபகரணங்கள் தயாரிப்பர். நீர் மருது மரத்துக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT