Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM

முட்டை விலை குறைத்து வழங்க இயலாது - என்இசிசி மண்டலத் தலைவர் அறிவிப்பு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) அறிவிக்கும் விலையில் முட்டையை வியாபாரிகள் எடுக்க வேண்டும், என்இசிசி விலையில் இருந்து குறைத்து வழங்கப்படமாட்டாது. இந்த நடைமுறை டிசம்பர் 31-ம் தேதியில் இருந்தே அமலாகும்’ என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டலத் தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் கூறினார்.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) சார்பில் கோழிப் பண்ணையாளர் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு கோழிப் பண்ணை யாளர் நலச் சங்கத் தலைவர் ஆர். நல்லதம்பி தலைமை வகித்தார். என்இசிசி நாமக்கல் மண்டல பொருளாளர் வி.வெங்கடாசலம் வரேவற்றார். என்இசிசி நாமக்கல் மண்டலத் தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் பேசியதாவது:

தமிழகம், கேரளாவுக்கு அனுப்பியது போக மீதமுள்ள 40 லட்சம் முட்டைகளை பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், பெங்களூரு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக கோழிப்பண்ணைகள் அமைக் கப்பட்டு வருகின்றன. அதனால், தற்போது உள்ள மார்க்கெட் எதிர்காலத்தில் இருக்குமா எனத் தெரியவில்லை.

கேரளாவில் கறிக்கோழி பண்ணைகள் தொடங்கப்பட்ட தால் பல்லடத்தில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழியை அனுப்பு வதில் சிக்கல் உள்ளது. அதனால் நிலவரம் உள்ளூர் விற்பனையைச் சார்ந்து உள்ளது.

அதுபோல் முட்டைக் கோழிப் பண்ணைத் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோன்ற சமயத்தில் உள் ளூர் நுகர்வு மூலம் முட்டை விற்பனையை அதிகரிக்க முடியும். அதற்கு முட்டை விலை குறைவாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க என்இசிசி அறிவிக்கும் விலையில் முட்டையை வியாபாரிகள் எடுக்க வேண்டும்.

என்இசிசி விலையில் இருந்து முட்டை குறைத்து வழங்கப்பட மாட்டாது. இந்நடைமுறை டிசம்பர் 31-ம் தேதியில் இருந்தே அமலாகும். அவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து பண்ணை யாளர்க ளுக்கும் என்இசிசி அறிவிக்கும் விலை கிடைக்கும் என்றார்.

முன்னதாக பல்வேறு கோழிப்பண்ணை சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், வியாபாரிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்துப் பேசினர்.

கோழிப்பண்ணை சங்க நிர்வாகிகள் கே.பொன்னுசாமி, சிங்கராஜ், முத்துசாமி, சுப்ரமணி யம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x