Published : 03 Dec 2013 06:27 PM
Last Updated : 03 Dec 2013 06:27 PM
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு மதுரை லேடிடோக் மகளிர் கல்லூரியில் பணி வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் டிச. 3-ம் நாள் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மதுரை பெத்சான் சிறப்புப் பள்ளியில் படித்த சந்தியாதேவி என்ற மாணவிக்கு லேடிடோக் கல்லூரி முதல்வர், ரூ. 5000 சம்பளத்துடன் கல்லூரி அலுவலக உதவியாளர் பணி வழங்கி அதற்கான ஆணையை வழங்கினார்.
இதுகுறித்து பெத்சான் சிறப்புப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் கூறியது: மனவளர்ச்சி குன்றியோருக்கு இதுவரை இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இவர்களால், எந்தவிதமான வேலைகளையும் செய்ய முடியாது என்பதால் அரசு இடஒதுக்கீடு வழங்கவில்லை. ஆனால், இதுவரை இங்கு பயின்ற 9 பேர், இருசக்கர உதிரி பாக விற்பனையாளர், நூலக உதவியாளர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல, இந்த பெண்ணும் இந்தக் கல்லூரியில் பணியில் சேர இருக்கிறார்.
இதன் மூலம், இவர்களாலும் பிறரைப்போல அனைத்துப் பணிகளையும் செய்ய முடியும் என்பதை உணரலாம்.
இதுபற்றி சந்தியாதேவி கூறுகையில், "எனக்கு வேலை கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. கிடைக்கும் சம்பளத்தில் நிறைய நகைகள் வாங்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT