Published : 27 Jun 2017 09:33 AM
Last Updated : 27 Jun 2017 09:33 AM

இலங்கை சிறையில் வாடும் 42 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதம்:

கடந்த 24-ம் தேதி அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துயர மான சம்பவத்தை தங்களின் உட னடி கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தங்கள் பாரம் பரிய மீன்பிடி பகுதியான பாக் ஜல சந்தியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் செயலை இலங்கை கடற்படை தொடர்ந்து செய்துகொண்டிருக் கிறது.

கடந்த 24-ம் தேதி அதிகாலை கடலில் 2 இயந்திர படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ் வரம் மீனவர்கள் 11 பேரும், மற்றொரு சம்பவத்தில் ஒரு இயந் திர படகில் மீன் பிடித்துக்கொண் டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 3 பேரும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கு மாறு மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப் படும் சம்பவங்களும், சிறைபிடிக் கப்படும் சம்பவங்களும் அதிகரித் துக்கொண்டே செல்கின்றன. இத் தகைய போக்குகள் மீனவர்களை மட்டுமின்றி தமிழக மக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2015 ஜனவரி முதல் இலங்கை அரசு பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் ஒன்றுகூட விடுவிக்கப் படவில்லை. இலங்கை அரசின் இத்தகைய மனிதாபிமானமற்ற போக்கினால் தமிழக மீனவர்களின வாழ்வாதாரத்துக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நீண்டகால பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழக மீனவர்களை இழுவை படகு மீன்பிடி முறையில் இருந்து பெரிய கண்ணிகளைக் கொண்ட வலைகளை (செவுள் வலைகள்) பயன்படுத்தும் முறைக்கு விரை வில் மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாற்றம் உடனே வந்துவிடாது. கொஞ்சம் காலம் ஆகலாம். இந்த நேரத்தில் எவ்வித அவகாசமும் கொடுக்காமல் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்வது அதன் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதையும், இந் திய அரசின் முயற்சிகளை அவமரியாதை செய்வதையும் காட்டுகிறது.

இந்த விஷயங்களை எல்லாம் தாங்கள் இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வ துடன் அந்நாட்டின் வசம் உள்ள 42 தமிழக மீனவர்கள், 141 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட் டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x