Published : 28 Jun 2017 08:32 AM
Last Updated : 28 Jun 2017 08:32 AM
மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி ஜூலை 6-ம் தேதி மாநில அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் கூடிய உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
மணல் விநியோகத்தை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். தனியார் மூலம் மணல் குவாரிகள் நடத்தப்பட்டபோது ஒரு நாளைக்கு 40 ஆயிரம் லோடு மணல் விற்பனையானது. ஆனால், அரசே குவாரிகளை நடத்தும்போது 4 ஆயிரம் லோடு மணல் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. தனியார் மூலம் மணல் விற்பனை செய்த போது சுயலாபம் அடைந்த அரசு அதிகாரிகள், அரசு மூலம் மணல் விநியோகம் செய்ய விருப்ப மின்றி, மணல் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே உருவாக்கு கின்றனர். இதனால் மணல் இல்லாமல் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்த அரசு அறிவித்தும் அரசுத் துறை களில் எம்.சாண்ட் பயன்படுத்து வதற்கான சுற்றறிக்கை வெளியாக வில்லை. அதனை விலைப் பட்டியலில் சேர்க்கவில்லை.
மணல் குவாரிகளை நடத்தாமல் முழுவதுமாக முடக்கிய காரணத்தால் கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக முடங்கிவிட்டன. வளர்ச்சிப் பணிகளும் தடைபட்டுள் ளன. இதனால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை யில்லாமல் பட்டினியால் வாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத், மகாராஷ்டிர மாநிலங் களில் பத்திரப் பதிவுக் கட்டணம் 5 சதவீதம், அண்டை மாநிலங்களில் 7 சதவீதம். ஆனால் தமிழகத்தில் மட்டும் 11 சதவீதமாக உள்ளது. இது, கட்டுமானத் துறைக்கும், பொதுமக்களுக்கும் சுமையையும், பெரும் பின்னடைவையும் ஏற் படுத்தியுள்ளது.
எனவே, மணல் தட்டுப்பாட்டை நீக்கவும், செயற்கை விலை யேற்றத்தைத் தடுக்கவும், பத்திரப் பதிவுக் கட்டணத்தை 5 சதவீத மாகக் குறைக்கவும் கோரி வரும் ஜூலை 6-ம் தேதி மாநில அளவில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்துடன் கூடிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து கூட்டமைப்புகளும் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT