Published : 21 Oct 2014 10:34 AM
Last Updated : 21 Oct 2014 10:34 AM
திரையரங்குகளில் கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதை தடுக்கவும், அரசாணையின்படி கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்ப தைக் கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த மா.வெற்றிவேல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
சினிமா திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்ற னர். இஷ்டத்துக்கு கட்டண வசூலிப் பதால் படம் பார்க்க செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தியேட்டர் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு 2009 மே 20-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் ஏசி திரை யரங்குகளில் அதிகபட்சம் ரூ.50, பிற திரையரங்குகளில் ரூ.30 கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அரசாணை அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதில்லை. கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் அரசாணையில் கூறப்பட்டிருப்பதை காட்டிலும் 200 மடங்கு அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர்.
ரூ.250 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில தியேட்டர்களில் கட்டணம் குறிப்பிடாமல் டிக்கெட் தருகின்றனர். சில திரையரங்கு களில் டிக்கெட் வழங்குவதில்லை.
இது தவிர ரசிகர் மன்றங் களுக்கு என மொத்தமாக டிக்கெட் வழங்கப்படுகிறது. அந்த டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப் படுகின்றன. இதை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் ஆணையர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.
தீபாவளி பண்டிகைக்கு புதிய சினிமாக்கள் வெளியாக உள்ளன. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தியேட்டர்களுக்கு உத்தரவிட வேண்டும். அரசாணையில் கூறப் பட்டுள்ள கட்டணத்தை வசூலிக்க கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட் டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபால், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. திரையரங்கு கட்டணம் தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT