Published : 26 Oct 2014 01:25 PM
Last Updated : 26 Oct 2014 01:25 PM

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங் களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த செப் டம்பர் மாதம் 25 முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வர்கள் உட்பட) மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (திங்கள் கிழமை) பிற்பகல் 2 மணி முதல், அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப் பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறையின் சேவை மையங்களில் வருகிற 29, 30, 31-ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

உரிய கட்டணத்துடன் ஆன் லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற பகுதி 1 மொழி பாடத்துக்கு ரூ.550, பகுதி 2 மொழித்தாளுக்கு (ஆங்கிலம்) ரூ.550, இதர பாடங்களுக்கு தலா ரூ.275 கட்டணம் ஆகும். மறுகூட்டல் கட்டணம் பகுதி 1 மொழி தாள் மற்றும் பகுதி 2 மொழித்தாளுக்கு (ஆங்கிலம்) ரூ.305,- உயிரியல் மற்றும் ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா -ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு வழங் கப்படும் ஒப்புகைச்சீட்டில் குறிப் பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் விடைத்தாள் நகல்களை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும், மேலும், மறுகூட்டல் முடிவு களையும் அறிய முடியும்.

எனவே, ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x