Published : 29 Nov 2013 09:14 PM
Last Updated : 29 Nov 2013 09:14 PM

தமிழக அரசு ரூ.1,200 கோடி பிணைய பத்திரங்கள் விற்பனை

ரூ.1200 கோடி பிணைய பத்திரங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக அரசு ரூ.1,200 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு காலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள மும்பை-கோட்டை அலுவலகத்தில் வரும் டிசம்பர் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

போட்டி ஏலக் கேட்புகள் காலை 10:30 மணி முதல் பகல் 12 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x