Published : 19 Jun 2017 08:49 AM
Last Updated : 19 Jun 2017 08:49 AM
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் நமது நெல்லை காப்போம், கிரியேட் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற 2 நாள் நெல் திருவிழா நேற்று நிறைவடைந்தது.
விழாவில், நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் நெல்.ஜெயராமன் வரவேற்றார். திருவாரூர் வரத ராஜன் நன்றி கூறினார். இந் நிகழ்ச்சியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி, பாரம்பரிய முறையில் விவசாயம் செய்து சாதனை படைத்த 13 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கி னார்.
அப்போது, அவர் பேசியது: உணவுப்பொருள் வழங்கல் துறை, வேளாண்மைத் துறையுடன் இணைந்து ரேஷன் கடை ஊழியர் கள் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை விற்க ஆன்லைன் சந்தையை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியை மேற்கொள்ளவுள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களைக் கொண்டு, விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் இது போன்று பதிவேற்றம் செய்யப் படும்போது, எந்ததெந்த ஊர் களில் என்னென்ன விளைபொருட் கள் விற்பனைக்கு தயாராகவுள் ளன, அதன் விலை நிலவரம் என்ன என்பது போன்ற தரவுகள் ஒருங்கி ணைந்துவிடும். அதன் மூலம் விற்பனை முனையமே ஆன்லைன் சந்தையாக செயல்படுவதுடன், கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்குரிய தொகையை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கவும் முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT