Published : 28 Jun 2017 12:33 PM
Last Updated : 28 Jun 2017 12:33 PM

மதுரையில் எய்ம்ஸ் அமைய அதிமுகவுடன் இணைந்து திமுக போராட தயார்: திருமங்கலம் உண்ணாவிரதத்தில் பி.மூர்த்தி எம்எல்ஏ அறிவிப்பு

மதுரையில் எய்ம்ஸ் அமைய அதிமுகவுடன் இணைந்து போரா டுவது உட்பட திமுக தயாராக இருப்பதாக வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்துகின்றன. திமுக சார்பில் நேற்று திருமங்கலத்தில் உண்ணாவிரதம் நடந்தது.

முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தலைமை வகித்தார். புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணி மாறன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கள் கோ.தளபதி, வி.வேலுச்சாமி, பிடிஆர்.பி.தியாகராஜன் எம்எல்ஏ. பாஜக மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் எம்.ஜெயராமன், கார்த்திகேயன், ரவிச் சந்திரன், கம்யூனிஸ்ட் சார்பில் காளிதாஸ், ராமகிருஷ்ணன், பா.பிளாக் சார்பில் பி.வி.கதிரவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்குலாப், செல்வராஜ், போராட்டக்குழு ஒருங்கிணைப் பாளர் மணிமாறன் உட்பட கட்சியினர், சங்கத்தினர், சமூக நல அமைப்பினர் பங்கேற்றனர்.

பி.மூர்த்தி பேசியது: மதுரையில் எய்ம்ஸ் அமைய அனைத்து தகுதியும் இருப்பதற்கான கோப்பினை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதே தயார் செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த கோப்பை ஏன் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என் பதே கேள்வி. இந்த கோப் பினை அனுப்பியிருந்தால் மதுரை எப்போதோ தேர்வானதாக அறிவிக்கப்பட்டிருக்கும். மதுரை யில் எய்ம்ஸ் அமையாவிட்டால் ராஜினாமா செய்வதாக அதிமுக எம்எல்ஏ அறிவித்துள்ளதை வர வேற்கிறோம்.

மதுரைக்கு எய்ம்ஸ் வராவிட்டால் 10 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால் தமிழக அரசு கவிழும். அப்போது மக்களுக்காக பாடுபடும் நல்ல அரசு வரும். செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் வராது என முதல்வரே தெரிவித்துவிட்டார். மதுரையில் அமைய மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் துணையாக இருப்பதை வரவேற்கிறோம். மதுரை அமைச்சர்கள் எய்ம் ஸ்க்காக போராட்டம் நடத்த அழைத்தால் உங்கள் பின்னால் அணிவகுக்க திமுக தயார். இந்த உண்ணாவிரதத்தில் அதிமுக பங்கேற்றிருந்தால் வரவேற்றிரு ப்போம். மக்களுக்கு நல் லது நடக்கும் காரியங்களை செய்ய மு.க.ஸ்டாலின் அனுமதி அளித் துள்ளார் என்றார்.

மதுரையில் அமைவதே நியாயம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் பேசியது:

தமிழக அரசு நியாயமற்ற முறையில் பரிந்துரைத்த தஞ் சாவூர் மாவட்டம் செங்கிப்ப ட்டியை மத்திய அரசே நிராகரித்துள்ளது. மதுரையில் அமைவதற்கான தகுதியான அம்சங்களை 30 பக்க அளவில் பட்டியலிட்டு ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். மதுரைக்கான சாதக அம்சங்களை இனியும் மறைக்கப் பார்த்தால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெற்று பொதுவெளியில் வெளியிடுவோம்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், அவர்கள் குடும்பத்தினர் தங்க வும், குழந்தைகள் படிக்கவும் மதுரையில்தான் வசதிகள் உள்ளன. மத்திய ஆய்வக்குழு அளித்துள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையிலும் தகுதி அடிப் படையில் முன்னணியில் உள்ள மதுரையில்தான் எய்ம்ஸ் அமை வதற்கான நியாயமும், பொருத்தமான சூழலும் உள்ளன என்றார்.

3.50 கோடி பேர் பயன் அடைவார்கள்

பாஜக மாநிலச் செயலாளர் ஆர். ஸ்ரீனிவாசன் பேசியது:

தமிழகத்தில் எய்ம்ஸ் அமைய வேண்டும். எங்கு அமைந்தால் அதிக பலன் கிடைக்கும் என்பதையே பாஜக பார்க்கிறது. தஞ்சையில் அமைந்தால் ஒரு கோடி பேர்வரை பயனடைய வாய்ப்புள்ளது. மதுரையில் அமைந்தால் 3.50 கோடிப் பேர் பயனடைவர். தஞ்சாவூரைச் சுற்றி மத்திய நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. தென் மாவட்டங்களில் எதுவும் இல்லை. ரூ.2 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும்போது, இதற்கு துணையாக ரூ.3 ஆயிரம் கோடியில் பல்வேறு தொழில்கள் வந்துசேரும். இதனால் தென் மாவட்டங்களிலிருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்காக புலம்பெயர்வது குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x