Published : 04 Oct 2014 09:05 AM
Last Updated : 04 Oct 2014 09:05 AM
மதுக்கடைகளை மூடிவிட்டு அனை வருக்கும் மாற்றுப்பணியை வழங்க வேண்டும் என்ற டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை கள் நிறைவேறும் வகையில் மக்க ளைத் திரட்டி போராட்டம் நடத்து வோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நேற்றுமுன்தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து டாஸ்மாக் பணி யாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டி.தனசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
எங்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் படிப்படி யாக மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், டாஸ்மாக்கில் பணி புரியும் பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணி வழங்கக் கோரியும் காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.
இதில் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்ற நல்லகண்ணு பேசிய போது, “டாஸ்மாக் பணியாளர் களின் கோரிக்கைகளை வென் றெடுக்க விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்பு கள் சார்பாக பொதுமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
பாஜக வாழ்த்து
மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்டும் வகை யில் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலை வர் குமரி அனந்தன் உரையாற்றும் போது, “தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணி யாற்றும் பணியாளர்களே உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது நல்ல தொடக்கம். இக்கோரிக்கை வெற்றிபெறும் வரை நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம். உங்களுக்கு மாற்றுப் பணி கிடைக்க பொதுமக்களோடு இணைந்து போராடுவோம்” என்று குறிப்பிட்டார்.
இதில் தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டு டாஸ்மாக் பணியாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து பேசினர். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து பெருந்திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT