Published : 16 Nov 2013 05:04 PM
Last Updated : 16 Nov 2013 05:04 PM

கரையைக் கடந்தது காற்றழத்த தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் நாகப்பட்டினத்திற்கு வடக்கே கரையைக் கடந்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாகை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தாலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x