Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM
தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அது தொடர்பான ஆயத்தப் பணிகள் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திட்டப் பணிகளுக்காகவும் தொடர் செலவினங்களுக்காகவும் தமிழக அரசு சார்பில் வரவு செலவு கணக்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
2013-14-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிதியாண்டின் கூடுதல் செலவினங்களுக்கான துணை நிதி நிலை அறிக்கை, சட்டமன்றத்தில் கடந்த அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, சற்று முன்னதாகவே தாக்கல் செய்துவிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வருவதால், இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
2014 மே 15-க்குள் மத்தியில் புதிய அரசு அமைய வேண்டும். அதனால் தேர்தல் எந்நேரத்திலும் அறிவிக்கப்படலாம். எனவே, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தக் கூட்டங்கள் செப்டம்பர் மாதம் தொடங்கியது. சமீபத்தில் அப்பணிகள் முடிவடைந்தன. எனவே, பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT