Published : 19 Nov 2013 11:56 AM
Last Updated : 19 Nov 2013 11:56 AM
துப்புரவு பணியாளர்கள் மேற் கொள்ளும் துப்புரவு பணியை உறுதி செய்ய, பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் புதிய நடை முறையை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மூன்று மண்டலங்களில் ராம்கி என்ற தனியார் நிறுவனம் துப்புரவு பணியை மேற்கொள்கிறது. மற்ற 12 மண்டலங்களில் மாநக ராட்சியே துப்புரவு பணியை மேற்கொள்கிறது.
மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் 9 ஆயிரத்து 73 நிரந்தர பணியாளர்கள், 700 தினக்கூலி தொழிலாளர்கள், 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ராம்கி என்ற தனியார் நிறுவன பணியாளர்கள் என, 14 ஆயிரத்து 773க்கும் மேற்பட்டவர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் புதிய நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
சென்னை மாநகராட்சி பகுதிகளில், காலை 6.30 மணி முதல், 10.30 மணி வரையும், மதியம் 2.30 மணிமுதல், மாலை 5.00 மணிவரையும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த துப்புரவு பணிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்படு வதில்லை என பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
எனவே, அப்புகார்களை தவிர்க்க, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் துப்புரவு பணியை மேற்கொள்ளும் மாநக ராட்சியின் அனைத்து பகுதிகளிலும், துப்புரவு பணியாளர்கள், நாள் தோறும் தாங்கள் துப்புரவு பணியை மேற்கொள்ளும் பகுதிகள் ஒவ்வொன்றிலும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அல்லது குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்தோரிடம், பணியாளருக்கு அளிக்கப்பட்ட குறிப்பேட்டில் கையெழுத்து பெறவேண்டும் எனும் புதிய நடைமுறை அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை படிப்படியாக ஒவ்வொரு மண்டலத்திலும் அமல்படுத்தப்பட்டு, தற்போது சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், துப்புரவு பணி தொடர்பான பொதுமக்களின் புகார்கள் குறைய தொடங்கியுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT