Published : 09 Oct 2014 10:16 AM
Last Updated : 09 Oct 2014 10:16 AM

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி அரசு குற்றவியல் வழக்கறிஞர் சுதந்திரமாக செயல்பட முடியுமா?

அரசு குற்றவியல் வழக்கறிஞர் (Public prosecutor) என்பவர் மாநில அரசு அல்லது காவல் துறை யின் கருத்தை அறிந்து செயல்பட வேண்டுமா அல்லது சுதந்திரமாக செயல்பட முடியுமா என்பது பற்றி தற்போது பரவலாக விவாதிக் கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பளித் தார். குற்றம் நிரூபிக்கப்பட்டுள் ளதால் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சிறப்பு அரசு குற்றவியல் வழக் கறிஞர் ஜி.பவானிசிங் அப்போது நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தபோது, ஜாமீன் வழங்கக் கூடாது என தொடக் கத்தில் எதிர்ப்பு தெரிவித்த பவானிசிங், நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞரின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றம் பற்றி பலரால் விவாதிக்கப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என அரசு அல்லது புலன் விசாரணை அமைப்பிடமிருந்து அவருக்கு அறிவுறுத்தல் வந்திருக்கலாமா, அப்படி வந்தால் அதன்படிதான் அவர் செயல்பட வேண்டுமா என்பது பற்றி விவாதம் நடக்கிறது.

இது பற்றி கேட்டபோது வழக்க றிஞர் அ.சிராஜூதீன் கூறியதாவது:

அரசு குற்றவியல் வழக்கறிஞர் என்பவர் நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே நீதிமன்றத்தில் அவரது செயல்பாடு இருக்க வேண்டும். அரசு அல்லது புலன் விசாரணை நடத்தும் காவல்துறை கூறுவதை கேட்டு அதன்படியே நீதிமன்றத்தில் செயல்பட வேண்டும் என்ற கட்டா யம் எதுவும் அவருக்கு இல்லை.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சாதகமான ஒரு விஷயத்தை அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர தவறினால் கூட, அது அரசு குற்றவி யல் வழக்கறிஞருக்கு தெரிய வந்தால் நீதிமன்றத்தின் கவனத் துக்கு அதனை அவர் கொண்டு வர வேண்டும். அதனால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை ஆவார் என்று தெரிந்தாலும் கூட, உண்மையான விவரத்தை நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டியது அவரது கடமை. மொத்தத் தில் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படாமல், வழக்கு தொடர் பாக தனக்கு தெரிந்த உண்மையான விவரங்கள் அனைத்தையும் நீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதுதான் அரசு குற்றவியல் வழக்கறிஞரின் கடமையாகும்” என்கிறார் சிராஜூதீன்.

அவரது இந்தக் கருத்தை உறுதி செய்யும் வகையில் அரசு குற்ற வியல் வழக்கறிஞரின் கடமைகள் பற்றி உச்ச நீதிமன்றம் பல தீர்ப்பு களில் தெளிவான வழிகாட்டுதல் களை கூறியுள்ளது.

நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரின் பணிகள் என்பது நாட்டு மக்களின் நலன்களுக்கானது என்று 1980-ம் ஆண்டு பிறப்பித்த ஒரு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அதேபோல் நீதிமன்றத்தில் காவல் துறையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அரசு குற்ற வியல் வழக்கறிஞரின் பணிகள் இருக்கக் கூடாது என்றும், அவரது பணிகள் மக்களுக்காக இருக்க வேண்டும் என்றும், அவரது பணிகள் நேர்மையாகவும், அச்ச மற்றதாகவும் இருக்க வேண்டும் என்றும் 1954-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த மற்றொரு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு குற்றவியல் வழக்கறிஞர் சமுதாயத்தின் காவலர். குற்றவாளி கள் தண்டனை பெற வேண்டும் என்பதோடு, அப்பாவிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை முக்கிய கடமையாகக் கொண்டு அவர் செயல்பட வேண்டும் என்று 2004-ம் ஆண்டின் இன்னொரு தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

ஒரு வழக்கு தொடர்பாக தனக்கு தெரிய வந்த எல்லா உண்மைகளையும் நீதிமன்றத்துக்கு தெரிவித்து, அதன் மூலம் நீதிமன்றம் மிகச் சரியான முடிவை மேற்கொள்ளும் வகையில், உதவி செய்வதுதான் அரசு குற்றவியல் வழக்கறிஞரின் கடமை என 1965-ம் ஆண்டின் இன்னொரு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆக, ஜெயலலிதா தொடர் பான சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகும் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் பவானிசிங், முழுமை யான சுதந்திரத்துடன் செயல் படுவதற்கான சட்டப்பூர்வமான அதிகாரம் கொண்டவர் என்பது தெளிவாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x