Published : 16 Oct 2014 11:04 AM
Last Updated : 16 Oct 2014 11:04 AM
பணத்துடன் கடைக்கு வரும் மக்களை திருடர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தையும் பொருட்களையும் திருடிச் செல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்..
1) நீங்கள் கைக்குழந்தையுடன் சென்றால், குழந்தையை கிள்ளி, அதை அழ வைத்து, உங்கள் கவனத்தை குழந்தை பக்கம் திருப்பி, உங்களிடம் இருக்கும் பணம், பொருட்களை திருடிச் சென்றுவிடுவார்கள்.
2) உங்களிடம் பணம் இருப்பது தெரிந்துவிட்டால், கிரீஸ் மை அல்லது சகதி போன்று கறை பிடிக்கும் பொருட்களை உங்கள் மீது தடவி, அதை அவர்களே உங்களிடம் கூறி, கழுவுவதற்கும் தண்ணீர் கொடுத்து, அவர்களே கழுவி விட்டு, உங்கள் கவனத்தை திசை திருப்பி திருடுவார்கள்.
3) எனது பர்ஸ் தொலைந்துவிட்டது என்று பரபரப்பை உண்டாக்கி, ஒரு கூட்டத்தை கூட்டி, அதை வேடிக்கை பார்க்க ஆர்வமாக வருபவர்களிடம் கைவரிசை காட்டுவார்கள்.
4) தங்க நகைகளை வாங்கிச் செல்பவர்களை கண்காணித்து, அவர்களை பின்தொடர்ந்து சென்று, அதிகாரிபோல சோதனை செய்து நகைக்கு பில் இருக்கிறதா? என்று கேட்டு, காவல் நிலையம் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி நகையை ‘அபேஸ்’ செய்துவிடுவார்கள்.
5) தங்க நகைகளை அணிந்து செல்லும்போது, கூட்டத்தில் இப்படி அணிந்து செல்லக்கூடாது என்று கூறி, அவற்றை கழற்ற வைத்து, அவர்களே காகிதத்தில் மடித்து கொடுப்பதுபோல ஏமாற்றிவிடுவார்கள். தங்களை போலீஸ் என்று நம்பவைக்க, உங்கள் முன் இதேபோன்ற ஒரு நாடகத்தையும் அரங்கேற்றுவார்கள். அதைப் பார்த்து நீங்களும் ஏமாந்துவிடுவீர்கள்.
6) வயதானவர்கள் அதிக பொருட்களை கொண்டு செல்லும்போது, உதவி செய்வதுபோல அவற்றை திருடிவிடுவார்கள்.
7) ரூபாய் நோட்டுகளை சிதற விட்டும், கார் டயர் பஞ்சர், பெட்ரோல் டேங்க் லீக் ஆகிறது என்று உங்களின் நிலைக்கு ஏற்ப எதையாவது கூறி உங்கள் கவனத்தை திசை திருப்பி திருடுவார்கள்.
8) கூட்டத்தில் ஒரு கும்பல் உங்களை தொடர்ந்து நெருக்கிக்கொண்டே வந்தால் உங்கள் பொருளை அவர்கள் திருட சரியான நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
9) பெண்கள் மீது உங்கள் கவனத்தை திசை திருப்ப வைத்து உங்கள் பொருட்களை திருடுவார்கள்.
10) பல பைகளுடன் நீங்கள் செல்லும்போது, நீங்கள் அதிகம் கவனிக்காமல் இருக்கும் ஒரு பையை கவனித்து திருடிவிடுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT