சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு


சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

அதேநேரத்தில், டீசல் விலை வழக்கம்போல் லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது.

இதன் பயனாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.05 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை அறிவித்தன.

அதன்படி, உள்ளூர் வரி, வாட் வரிக்கு ஏற்ப அந்தப் பகுதிகளில் விலைக் குறைப்பு அமலுக்கு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x