Published : 28 Oct 2014 09:38 AM
Last Updated : 28 Oct 2014 09:38 AM
இலங்கை துறைமுகத்தில் சீனா வின் 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத் தப்பட்டுள்ளதால், இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.
அவர் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தமிழர்களுக்கு எதிராக சிங்கள, புத்த இனவெறிக்கு வித்திட்ட அநாகரிக தர்ம பாலா என்ற புத்த பிக்குவுக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
தமிழக எல்லைக்குள் காவிரி யாற்றில் மீன் பிடித்த தமிழரை கர்நாடக போலீஸ் கொன்றுள்ளது. இதேபோல, பழவேற்காடு அருகே தமிழக எல்லையில் மீன் பிடிக் கும் தமிழர்கள் ஆந்திர மாநிலத்தவ ராலும், ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையாலும் தாக் கப்படுகின்றனர். இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. தமிழர்களை இந்திய குடிமக்களாக மத்திய அரசு பார்ப்பதில்லை. இந்தப் போக்கை தமிழர் தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கை துறைமுகத்தில் சீனாவின் 3 நீர்முழ்கிக் கப்பல் கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிங்கள ராணுவத்தினருக்கு சீன தளபதிகள் பயிற்சி அளிக்கின்றனர். சீனாவுக் குச் சென்று சிங்கள ராணுவத் தள பதிகள் பயிற்சி எடுத்து வருகின் றனர். கிரிமினல் குற்றங்கள் புரிந்து சிறையில் இருந்த 20 ஆயிரம் சீன கைதிகள், இலங்கை யில் கட்டுமானப் பணியில் ஈடு படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி யில்தான் அவர்கள் தங்கியுள்ளனர். இவ்வாறு தமிழர்களுக்கு அச் சுறுத்தலை ஏற்படுத்தும் இலங்கை அரசின் செயலைக் கண்டிக் கிறோம்.
மொழி வழியில் ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்கள் உரு வான நாளை, அந்தந்த மாநில அரசுகளும், மக்களும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், தமிழ கத்தை ஆண்ட கட்சிகள், தமிழ் நாடு உருவான நாளை புறக் கணித்து வருகின்றன. எனவே, தமிழ்நாடு உருவான நவ. 1-ம் தேதியை அரசும், மக்களும் கொண் டாட வேண்டும். இதில் முரண் பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாடு எப்போதும் தமிழர் களுக்கு எதிராகவே உள்ளது. இந்திய-இலங்கை உறவுக்கு தமிழர் பிரச்சினை இடையூறாக இருப்பதை விரும்பவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்திரி சாரி கூறியுள்ளார். இதை மோடியும், பாஜக தலைவர் களும் மறுக்கவில்லை. இதி லிருந்து, மத்திய அரசும், பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.
இலங்கையை இந்தியாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் சீனா செயல்பட்டு வருகிறது. அதனால், இலங் கையை இந்தியா தாஜா செய்து வருகிறது. ஆனால் அது பலிக்காது. ஏனெனில், இலங்கையில் சீனா வின் பிடி இறுகிவிட்டது. இதனால், இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சவுக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது, அந்த விருதையும், இதுவரை விருது பெற்றவர்களையும் அவமதிக்கும் செயல் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT