Published : 29 Jun 2017 09:09 AM
Last Updated : 29 Jun 2017 09:09 AM
தமிழகத்தில் சிறப்பாக பணியாற் றிய 177 அரசு டாக்டர்களுக்கு விருது, பதக்கங்களை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.
தமிழக மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர் களுக்கு சுகாதாரத் துறை சார்பில் விருது, பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ் நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கலந்துகொண்டு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய 12 டாக்டர்களுக்கு (அரசுக்கு உதவிய தனியார் டாக்டர்கள் உட்பட) விருதுகளும், சிறப்பாக சேவை புரிந்த 165 அரசு டாக்டர்களுக்கு பதக்கங்களும் வழங்கப் பட்டன.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணை யர் மோகன் பியாரே, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் (பொறுப்பு) பெ.அமுதா, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநர் பு.உமாநாத், தேசிய சுகாதார இயக்கத்தின் குழும இயக்குநர் டரேஸ் அகமது, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் கி.செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, ‘‘தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடாது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்று முன் னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக மருத் துவத் துறையை முதலிடத்துக்கு கொண்டுவந்ததில் டாக்டர்களின் ஈடுபாட்டோடு கூடிய சேவை மிகவும் உதவியாக இருந்துள்ளது. இந்த நிலை தொடர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
சிறப்பாக பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT