Published : 19 Apr 2014 10:49 AM
Last Updated : 19 Apr 2014 10:49 AM

நிறுவனங்களின் செலவினங்களை தனியாக கண்காணிக்க வேண்டும்: உலக வங்கியின் இயக்குநர் சோமநாதன் பேச்சு

நிறுவனங்களின் வரவு, செலவை ஆண்டுதோறும் கணக்கிட்டாலும், செலவினங்களை மட்டுமே தனியாக கண்காணிக்க வேண்டுமென உலக வங்கியின் (சிறப்பு திட்டங்கள்) இயக்குநர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் தென் மண்டல கவுன்சில் சார்பில் செலவின மேலாண்மை கணக்கர் (சிஎம்எ) தொடர்பான மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது.

மாநாட்டில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் தென் மண்டல கவுன்சில் துணைத் தலைவர் எச்.பத்மநாபன் வரவேற் புரை ஆற்றினார்.

அகில இந்திய தலைவர் எஸ்.சி.மொஹந்தி, துணைத் தலைவர் ஏ.எஸ்.துர்கா பிரசாத், பாரதிய மகிளா வங்கியின் தலைவர் உஷா அனந்த சுப்பிரமணியன், தென் மண்டல தலைவர் பி.ராஷூ ஐயர் ஆகியோர் செலவின மேலாண்மை துறை பற்றி விரிவாக பேசினர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலக வங்கியின் (சிறப்பு திட்டங்கள்) இயக்குநர் டாக்டர் டி.வி.சோமநாதன் பேசுகையில், ‘‘உலக நாடுகளில் பல்வேறு வகையில் செலவின மேலாண்மை கணக்குகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இருக்கும் செலவின மேலாண்மை முறை தனித்துவம் மிக்கது.

கடந்த 1991-ம் ஆண்டுக்கு முன்பு வரையில் இந்தியா உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, செலவு முறை என பல்வேறு வரைமுறைகளை வகுத்து செயல்பட்டது. ஆனால், 1991 பிறகு உலகமயமாக்கல் காரண மாக உலக நாடுகளைப் போல், இப்போது வரைமுறைகளை பின்பற்றுவது குறைந்துவிட்டது.

நிறுவனங்களின் வரவு, செலவு ஆவணங்களை பாதுகாப்பாக வைப்பது மிகவும் அவசியமானது. உலகமயமாக்கல் காரணமாக ஏற்கெனவே இருந்து வரும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு புதிய திட்டங் களை செயல்படுத்திக்கொண்டு இருக்கின்றன.

வழக்கமாக அனைத்து நிறுவனங்களிலும் ஆண்டுதோறும் வரவு, செலவு முறை கணக்கிடப் பட்டு வருகிறது. இருப்பினும், ஒவ் வொரு நிறுவன செலவினங் களையும் தனியாக கண்காணிக்க வேண்டும். இதனால், விலைவாசி உயர்வை ஒரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x