Published : 12 Oct 2014 11:49 AM
Last Updated : 12 Oct 2014 11:49 AM
சர்வதேச பெண் குழந்தை தினம் மற்றும் தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு 740 பெண் குழந்தைகளுக்கு சென்னையில் நேற்று அஞ்சல் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன. அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 11-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் விழா நடை பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சல் அதிகாரி த.மூர்த்தி, அஞ்சுகம் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகளுக்கான சேமிப்பு கணக்குகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “குழந்தைப் பருவத்திலிருந்தே சேமிப்பு பழக்கத்தை வளர்த்தெடுப்பது திட்டமிட்ட பொருளாதாரத்துக்கு மிக அவசியம். கிசான் விகாஸ் பத்திரம் அக்டோபர் 16-ம் தேதி முதல் அனைத்து தபால் நிலையங்களி லும் விற்பனைக்கு வரும்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை வட்டார அஞ்சல் சேவைகள் இயக்கு நர் ஜே.டி.வெங்கடேஸ் வரலு, “அஞ்சல் வாரத்தில் சென்னையில் ஏராளமான சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களில் 740 பெண் குழந்தைகள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT