Published : 21 Nov 2013 11:20 PM Last Updated : 21 Nov 2013 11:20 PM
தமிழகம்: ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை உறுதிசெய்ய டிஜிபி உத்தரவு
பெங்களூர் சம்பவத்தில் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி ராமானுஜம் கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதுமுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஏடிஎம்களில் காவலாளிகளை கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அனைத்து ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஆணையர்கள், எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அறிவறுத்தியுள்ளார்.
முன்னதாக, பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஏ.டி.எம். மையத்தில் ஜோதி உதய் என்ற பெண் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்களில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து அம்மாநிலப் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT