Published : 26 Jun 2017 09:14 AM
Last Updated : 26 Jun 2017 09:14 AM
ஆளுநர் ஒப்புதல் தராததால் புதுச்சேரியில் விமான சேவை மேலும் 3 மாதங்களுக்கு தாமதம் ஆவதாக தலைமைச் செயலர் மனோஜ் பரிதா தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் ஆட்சி பொறுப் பேற்றதும் விமான சேவை தொடங்குவதற்கு முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை மேற் கொண்டார். சென்னை - புதுச் சேரி - சேலம் - பெங்களூரு வழித் தடத்திலும், புதுச்சேரி - சேலம் - ஐதராபாத் வழித்தடத்திலும் உடனடியாக விமானம் இயக்க தனியார் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தன. ‘ஸ்பைஸ் ஜெட்’, ‘ஒடிசா ஏர்’, ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனங்கள் விமான சேவையை தொடங்க தயாராக இருந்தன.
இதற்கிடையே புதுச்சேரி - ஐதராபாத் இடையே ‘ஸ்பைஸ் ஜெட்’ மூலம் ஜூலை 1-ம் தேதி முதல் விமான சேவையை தொடங்க ஏற்கெனவே முடிவு செய் யப்பட்டிருந்தது. ஆனால், இத னால் ஏற்படும் இழப்பை தனி யார் நிறுவனத்துக்கு 3 மாதங் களுக்கு அரசே வழங்க ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. நிதிக்கான விதிமுறைகள், மத்திய கண் காணிப்பு ஆணையத்தின் விதி முறைகளை காண்பித்து ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா கூறிய தாவது: இழப்புக்கான கட்ட ணத்தை அரசே செலுத்த முன் வந்த நிலையில் ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்துக்கு வழங்குவதைப் போன்று ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறு வனத்துக்கும் இழப்பீடு தரப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கோருதலை மத்திய அரசு வெளிப் படையான முறையில் நடத்து கிறது. ஆளுநர் ஒப்புதல் தராத தால் விமான சேவை 3 மாதங் கள் கழித்து செப்டம்பரில் தொடங்கப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT