Published : 19 Sep 2014 10:33 AM
Last Updated : 19 Sep 2014 10:33 AM
உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது. அதன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள் ளோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டி:
இடைத்தேர்தலில் ஜனநாயக அடிப்படையில் பாஜக போட்டியிட் டது. வேட்புமனு தாக்கல் தொடங்கி யதில் இருந்தே தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தலை முறையா நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும் எங்கள் கட்சியினர் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
ஆனால் தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. கோவையில் பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டார். ராமநாதபுரம், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான முறை கேடுகள் நடந்துள்ளன. இதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. நிறைய இடங்களில் பணப் பட்டுவாடா நடந்துள்ளது.
நிறைய பேர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இதை மாநில தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஆணையம் நியாயமாக நடக்கா மல் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளது. இது உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செய லாகும். எனவே இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளோம்.
அனைத்து கட்சிகளும் தேர்த லில் போட்டியிட்டிருந்தால் இதுபோன்ற முறைகேடுகளை தடுத்திருக்க முடியும். முறைகேடு கள் நடப்பது தொடர்ந்தால் பொதுமக்களுக்கு ஜனநாயகத் தின் மீதுள்ள நம்பிக் கையே இல்லா மல் போய்விடும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT