Published : 13 Aug 2014 09:30 AM
Last Updated : 13 Aug 2014 09:30 AM

மொழிபெயர்ப்புப் பணிகள் பாதிப்பு: தலைமைச் செயலகத்தில் 16 உதவி பிரிவு அதிகாரிகளை நியமிப்பதில் காலதாமதம்

மொழிபெயர்ப்பு பிரிவில் உதவி பிரிவு அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்புப் பணி

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலைய ஆட்சி மற்றும் செய்தித் துறையின் ஓர் அங்கமாக செயல்படுகிறது மொழிபெயர்ப்பு பிரிவு. அரசு ஆவணங்கள், அமைச்சரவை குறிப்புகள், அரசிதழ் அறிவிப்பு கள், விசாரணை குழுக்களின் அறிக்கைகள், அரசாணைகள், அரசின் சுற்றறிக்கைகள், மாநில தகவல் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணை யத்தின் வருடாந்திர அறிக்கைகள் போன்றவற்றை தமிழில் மொழிபெயர்ப்பது இப்பிரிவின் தலையாய பணி.

மொழிபெயர்ப்பு பிரிவில் இயக்குநர், இணை இயக்குநர், உதவி இயக்குநர், பிரிவு அதி காரிகள், உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ.) என பல்வேறு பணி நிலைகளில் அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இப் பிரிவில் கடந்த 7 ஆண்டு காலமாக ஏஎஸ்ஓ பணியிடங் கள் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது.

16 காலியிடங்கள்

இந்த நிலையில், தமிழ் பிரிவில் 13, தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகியவற்றில் தலா ஒன்று வீதம் மொத்த 16 உதவி பிரிவு அதிகாரி (மொழிபெயர்ப்பு) காலி யிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 6.12.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது.

இக்காலியிடங்கள் 2007-08 மற்றும் 2011-12-ம் ஆண்டு களுக்கு ஒதுக்கீடு செய் யப்பட்டவை ஆகும்.

இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 3.2.2013 அன்று நடத்தப்பட்டது. தேர்வு முடிவு 17.4.2013 அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 48 பேர் அடுத்த கட்ட தேர்வான நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு கடந்த 26.4.2013 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பொது வாக சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்றே நேர்முகத்தேர்வு நடத்தப் படுவது வழக்கம். ஆனால், நேர்முகத்தேர்வு பின்னர் நடத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டது.

பணிகள் பாதிப்பு

மலையாள மொழிப் பிரிவின் கீழ் தேர்வெழுதிய விண்ணப்ப தாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக நேர் முகத்தேர்வு நடத்துவதில் கால தாமதம் ஆவதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் சொல்லப்பட்டது.

இதற்கிடையே, பல ஆண்டு காலமாக உதவி பிரிவு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படாததால் தலைமைச் செயலகத்தில் மொழி பெயர்ப்பு பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன. உதவி பிரிவு அதிகாரிகள் செய்ய வேண்டிய அடிப்படை பணிகளை ஆய்வு அதிகாரிகளான பிரிவு அதிகாரிகளும், உதவி இயக்குநர்களும் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டு ஆகிறது

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து ஒன்றரை ஆண்டு ஆகியும் இன்னும் நேர்முகத் தேர்வு நடத்தவில்லையே? என்று பாதிக்கப்பட்ட தேர்வர்கள் மிகுந்த வேதனையுடன் தெரி வித்தனர்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமாரிடம் கேட்டபோது, ``மொழிபெயர்ப்பு பிரிவு உதவி பிரிவு அதிகாரி தேர்வுதொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, விரைவில் நேர்முகத்தேர்வுக்கான பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x