Published : 13 Aug 2014 12:00 AM
Last Updated : 13 Aug 2014 12:00 AM
இளைஞர், பெண்ணை மொட்டை அடித்து கரும்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தில், சிவகங்கையில் 3 பேர் கைது கைது செய்யப்பட்டனர். 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே உடைகுளத்தைச் சேர்ந்த உடையான் என்பவரது மகள் லதா (30). இவரது கணவர் மாரிமுத்து (35). கொத்தனார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
லதாவின் சித்தப்பா முனியாண்டி, அவரது மனைவி காளியம்மாள் (40). இவர்களுக்கு 3 மகன்கள், மகள் உள்ளனர்.
குடும்பத் தகராறில் காளியம்மாள் கணவரை பிரிந்து சிவகங்கையில் வசிக்கிறார்.
இந்நிலையில் மாரிமுத்து வுக்கும், காளியம் மாளுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி லதாவின் உறவினர் களுக்கு தெரிய வந்ததால், அவர்கள் முனியாண்டியை கண்டித்தனர். ஆனால், அவர்களின் தொடர்பு நீடித்து வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த லதாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் செவ்வாய்க் கிழமை மாரி முத்துவையும், காளியம் மாளையும் பிடித்து மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இருவரையும் உடை குளத்திலிருந்து கூத்தாண்டன் வரை சுமார் 6 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனராம். அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. அஷ்வின்முகுந்த் கோட்னீஸிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உத்தரவில் டி.எஸ்.பி., மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் பொன்ரகு, போலீஸார் மாரிமுத்துவையும், காளியம் மாளையும் மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக காளியம்மாள் அளித்த புகாரில் லதாவின் தந்தை உடையான், அவரது மகன் கண்ணன், உடையானின் அண்ணன் ஆறுமுகம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT