Published : 08 Aug 2018 11:05 AM
Last Updated : 08 Aug 2018 11:05 AM
திமுக தலைவர் கருணாநிதி தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னுடைய மறைவுக்குப் பின் ஏழைகள் பயன்பெறும் இலவச மருத்துவமனை அமைக்கத் தானமாக அளித்திருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது 86-வது பிறந்தநாளைக் கடந்த 2010 ஆண்டு கொண்டாடினார். அப்போது, வெளியிட்ட அறிவிப்பில், தற்போது நான் வாழும் கோபாலபுரம் இல்லம், என்னுடைய மறைவு, எனது மனைவியார் மறைவுக்குப் பின் அங்கு ஏழைகள் பயன்பெறும் இலவச மருத்துவமனையாக மாற்றப்பட வேண்டும்.
இதற்காக என்னுடைய இல்லத்தை அன்னை அஞ்சுகம்மாள் அறக்கட்டளைக்குத் தானமாக அளித்துவிட்டேன். அந்த மருத்துவமனை என்னுடைய மறைவுக்குப் பின், கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்று அழைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த 1968-ம் ஆண்டு கோபாலபுரம் இல்லத்தைத் தனது மகன்கள் முக அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரின் பெயரில் கருணாநிதி எழுதிவைத்தார். அதன்பின் அவர்களின் சம்மதத்துடன், கடந்த 2009-ம் ஆண்டு அந்த இல்லத்தை மருத்துவமனை அமைக்கத் தானமாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT