Published : 19 Nov 2025 06:57 AM
Last Updated : 19 Nov 2025 06:57 AM

பிரதமரை சந்திப்பது ‘சஸ்பென்ஸ்’ - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நெல்லையில் நேற்று வஉசி சிலைக்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன். | படம்: மு.லெட்சுமி அருண் |

திருநெல்வேலி: தமிழகம் வரும் பிரதமரை சந்​திப்​பது சஸ்​பென்ஸ் என்​றும், பொறுத்​திருந்து பாருங்​கள் என்​றும் அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கூறி​னார்.

அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன், நெல்​லை​யில் வ.உ.சிதம்​பர​னாரின் 89-வது நினைவு நாளை​யொட்​டி, அவரது சிலைக்கு நேற்று மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

அவருடன் முன்​னாள் எம்​.பி. சத்​தி​ய​பாமா மற்​றும் ஆதர​வாளர்​கள் வந்​திருந்​தனர். பின்​னர் செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த செங்​கோட்​டையனிடம், “கோவை வரும் பிரதமர் மோடியை சந்​திப்​பீர்​களா?” என்று கேள்வி எழுப்​பிய​போது “அது சஸ்​பென்​ஸ், பொறுத்​திருந்து பாருங்​கள்” என்று பதிலளித்​தார்.

மேலும், “அதி​முக​வில் தொடர்ந்து போராட்​டம் நடை​பெற்று வரு​கிறதே?” என்று கேட்​டதற்​கு, செங்​கோட்​டையன் பதில் அளிக்​காமல் அங்​கிருந்து சென்​றார். நெல்​லை​யில் வஉசி நினைவு நாள் நிகழ்ச்​சி​யில் முதன்​முறை​யாக செங்​கோட்​டையன் கலந்​து​கொண்​டது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x