Published : 19 Nov 2025 06:33 AM
Last Updated : 19 Nov 2025 06:33 AM

சென்னையில் பரவலாக மழை: பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்பு 

சென்னையில் நேற்று காலை மழை இல்லாத நிலையில், மாலை பள்ளிவிடும் வேளையில் பலத்த மழை பெய்ததால், மாணவ-மாணவிகள் நனைந்தபடி சிரமத்துடன் வீட்டுக்கு சென்றனர். | படங்கள்: ம.பிரபு |

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், சென்​னை​யில் நேற்று பரவலாக மழை பெய்​தது. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தற்​போது தீவிரமடைந்​துள்​ளது. இதை மேலும் தீவிரப்​படுத்​தும் வித​மாக, தென் மேற்கு வங்​கக்​கடலில் இலங்கை கடலோரப் பகு​திக்கு அப்​பால் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நில​வு​கிறது.

இதுமேற்​கு, வடமேற்​கில் தமிழகம் நோக்கி நகர்​கிறது. இதன் காரண​மாக, தமிழகத்​தில் பல்​வேறு இடங்​களில் மழை பெய்து வரு​கிறது. இந்​நிலை​யில் சென்னை மற்​றும் புறநகரில் நேற்று பரவலாக மழைபெய்​தது. சென்​னையைப் பொருத்​தவரை, பல இடங்​களில் நேற்று முன்​தினம் இரவு​முதல் விட்​டு​விட்டு மித​மானமழை பெய்​தது.

மயி​லாப்​பூர், மந்​தைவெளி, ஆர்​.ஏ.புரம், அடை​யாறு, சாந்​தோம், நுங்​கம்​பாக்​கம், கோடம்​பாக்​கம், வடபழனி, கிண்​டி, ஈக்​காட்​டுத்​தாங்​கல், சைதாப்​பேட்​டை, புரசை​வாக்​கம், எழும்​பூர், பெரம்​பூர், கொளத்​தூர், சூளைமேடு உட்பட பல்​வேறு இடங்​களில் மழை பெய்​தது. நேற்று காலை​யில் மேகமூட்​ட​மாக இருந்​தது. சில இடங்​களில் சில மணி நேரம் லேசான வெயில் அடித்​தது. இதன்​பிறகு, மேகக்​கூட்​டங்​கள் திரண்​டு, குளிர்ந்த காற்​றுடன் விட்​டு​விட்டு மழை பெய்​யத் தொடங்​கியது. சில இடங்​களில் பரவலாக மழை பெய்​தது.

இதற்​கிடை​யில், நேற்று பிற்​பகலுக்​குப் பிறகு, சென்​னை​யில் பல இடங்​களில் மித​மானது முதல் பலத்த மழை வரை பெய்​தது. சென்னை சென்ட்​ரல், எழும்​பூர், வேப்​பேரி, புரசை​வாக்​கம், சேத்​துப்​பட்​டு, தி.நகர், திரு​வல்​லிக்​கேணி, நுங்​கம்​பாக்​கம் உட்பட பல இடங்​களில் மித​மான மழை பெய்​தது. மழை காரண​மாக பல இடங்​களில் மழைநீர் தேங்​கி, போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. பள்​ளி​களுக்​குச் சென்ற மாணவ, மாணவி​கள் நேற்று மாலை வீடு திரும்ப சிரமப்​பட்​டனர்.

நுங்​கம்​பாக்​கத்​தில் நேற்று மாலை நில​வரப்​படி 2 செ.மீ. மழை பதி​வாகி இருந்​தது. சென்​னை​யில் நேற்று பெய்த மழை காரண​மாக, குளிர்ச்​சி​யான சூழல் நில​வியது. சென்னை தவிர திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் சில இடங்​களில் மித​மான மழை பெய்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x