Published : 18 Nov 2025 06:35 AM
Last Updated : 18 Nov 2025 06:35 AM
சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நவ.17 (நேற்று) முதல் டிச.27-ம் தேதி வரையும், மகரவிளக்கு பூஜை டிச.30 முதல் 2026 ஜன.19-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதையொட்டி, சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை 18004251757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இரு மாநில எல்லையான களியக்காவிளையில் உள்ள தகவல் மையத்தை 9488073779, 9486270443, 9442872911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அறியலாம்.
சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை நவ.17 முதல் டிச.2-ம் தேதி வரை 9443994342, 6385806900, 8531070571 ஆகிய எண்களிலும், டிச.3 முதல் 17-ம் தேதி வரை 8344021828, 7094906442, 7558839969 ஆகிய எண்களிலும்,டிச.18 முதல் 2026 ஜன.2-ம் தேதி வரை 8921937043, 9080650431, 9940576898 என்ற எண்களிலும், ஜன.3 முதல் 20-ம் தேதி வரை 9843370229, 9942505466, 8438444770 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT