Published : 18 Nov 2025 10:16 AM
Last Updated : 18 Nov 2025 10:16 AM
“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இன்று அதை பற்றியே பேசுவதில்லை. ஏனென்றால், டாஸ்மாக் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடைகளை குறைப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரு கடையைக்கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர்.
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்றைக்கு ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது நாட்டு மக்களின் பணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டு திமுக-வுக்குச் சென்றார். அங்கே இருந்து கொண்டு இவ்வளவு சம்பாதித்துள்ளார். அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கு உள்ளது. வரும் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது இந்த மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT