Published : 17 Nov 2025 06:19 AM
Last Updated : 17 Nov 2025 06:19 AM

7 இடங்களில் சிறப்பு முகாம் 2,500 செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில் சென்​னை​யில் 7 இடங்​களில் நேற்று நடை​பெற்ற ரேபிஸ் நோய் தடுப்​பூசி முகாமில் 2,552 செல்​லப் பிராணி​களுக்கு தடுப்​பூசி செலுத்​தி, மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் செல்​லப் பிராணி​கள் வளர்ப்​ப​தற்​கான உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி இணை​யதளம் வாயி​லாக தங்​கள் விவரங்​களை பதிவு செய்​து, ரேபிஸ் நோய் தடுப்​பூசி போட்​டுக்​கொண்​டு, மைக்ரோ சிப் பொருத்​திக்​கொள்ள வேண்​டும். செல்​லப் பிராணி உரிமை​யாளர்​கள் வலை​தளத்​தில் சென்று பதிவுச் சான்​றிதழை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

ரேபிஸ் நோய் தடுப்​பூசி போடு​வது, மைக்​ரோசிப் பொருத்​து​வது போன்ற சேவை​கள், மாநக​ராட்​சி​யின் திரு.​வி.க.நகர், புளியந்​தோப்​பு, லாயிட்ஸ் காலனி, நுங்​கம்​பாக்​கம், கண்​ணம்​மாபேட்​டை, மீனம்​பாக்​கம் ஆகிய 6 இடங்​களில் செயல்​படும் செல்​லப் பிராணி​கள் சிகிச்சை மையங்​களில் இலவச​மாக வழங்​கப்​படு​கின்றன.

செல்​லப் பிராணி​யின் உரிமை​யாளர்​கள் எளி​தில் பயன்​பெற வேண்​டும் என்​ப​தற்​காக கடந்த 2 வாரங்​களாக ஞாயிற்​றுக்​கிழமை​களில் மேற்​கண்ட 6 மையங்​களி​லும், தென்​சென்​னை​யில் சோழிங்​கநல்​லூர் நாய் இனக்​கட்​டு​பாட்டு மையத்​தி​லும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்​கள் நடை​பெற்​றன.

நேற்று நடை​பெற்ற சிறப்பு முகாம்​களில் 2,552 செல்​லப் பிராணி​களுக்கு ரேபிஸ் நோய் தடுப்​பூசி செலுத்​தி, மைக்​ரோசிப் பொருத்​தப்​பட்​டது. செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர்​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டது. புளியந்​தோப்​பில் நடை​பெற்ற முகாமை மேயர் ஆர்​.பிரியா பார்​வை​யிட்​டார். சென்​னை​யில் இது​வரை, மொத்​தம் 10,820 செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளது. அடுத்த சிறப்பு முகாம், மேற்​கண்ட 7 இடங்​களி​லும் வரும் நவ.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x