Published : 14 Nov 2025 05:59 AM
Last Updated : 14 Nov 2025 05:59 AM

சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, சேலம்  வழியாக சிறப்பு ரயில்

சென்னை: சபரிமலை ஐயப்​பன் கோயிலுக்கு செல்​லும் பக்​தர்​கள் வசதிக்​காக, தெலங்​கானா மாநிலம் சார்​லபல்லி - கோட்​ட​யம் இடையே சிறப்பு ரயில் இயக்​கப்​படு​கிறது. இதன்​படி, சார்​லபல்​லி​யில் இருந்து நவ.24-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் (07115) புறப்​பட்​டு, மறு​நாள் மாலை 5.30 மணிக்கு கோட்​ட​யத்தை அடை​யும்.

மறு​மார்க்​க​மாக, கோட்​ட​யத்​தில் இருந்து நவ.25-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் (07116) புறப்​பட்​டு, 27-ம் தேதி அதி​காலை 2.30 மணிக்கு சார்​லபல்​லியை சென்​றடை​யும். இந்த ரயில் காட்​பாடி, ஜோலார்​பேட்​டை, சேலம், ஈரோடு வழி​யாக இயக்கப்​படும். டிக்​கெட்முன்​ப​திவு இன்று (14-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x