Published : 14 Nov 2025 06:52 AM
Last Updated : 14 Nov 2025 06:52 AM

தேச விரோத செயல்களில் ஈடுபடுவோரை காப்பாற்ற குரல் கொடுக்கும் திமுக கூட்டணி கட்சிகள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

காரைக்குடி: தேச விரோத செயல்​பாடு​களில் ஈடு​படு​வோரை காப்​பாற்ற திமுக கூட்​டணி கட்​சிகள் குரல் கொடுக்​கின்றன என்று பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறி​னார்.

காரைக்​குடி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் கார் குண்டு வெடிப்பு என்​பது, பாஜக ஆட்​சி​யில் 11 ஆண்​டு​களில் ஜம்​மு-​காஷ்மீருக்கு வெளியே நடை​பெற்ற முதல் சம்​பவம். நாட்டு நலனில் அக்​கறையற்ற திமுக, விசிக போன்ற கட்​சிகள், வாக்​கு​களுக்​காக தவறான கருத்​துகளைத் தெரிவிக்​கின்​றனர்.

பயங்​கர​வா​தி​களிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்​டிருந்த 2,900 கிலோ வெடிபொருட்​கள் வெடித்​திருந்​தால் என்​ன​வாகி இருக்​கும்? வெடி பொருள்​களு​டன் பயங்​கர​வா​தி​களை கைது செய்​ததன் மூலம் லட்​சக்​கணக்​கான மக்​களை பிரதமர் மோடி​யும், மத்​திய உளவுத் துறை​யினரும் காப்​பாற்​றி​யுள்​ளனர். ஆனால், மத்​திய அரசை குறை கூறி, திமுக, விசிக போன்ற கட்​சிகள் தேச விரோத செயல்​களில் ஈடு​படு​கின்​றன.

பயங்​கர​வா​தி​களிட​மிருந்து ஆர்​டிஎக்ஸ் வெடிபொருள் 363 கிலோ கிடைத்​துள்​ளது. இந்த விவ​காரத்​தில் வெளி​நாட்டு சதி இருக்க வாய்ப்​புள்​ளது. தேச விரோத செயல்​பாடு​களில் ஈடு​படு​வோரை காப்​பாற்​றத்​தான் திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் குரல் கொடுக்​கின்​றன. இதை வன்​மை​யாக கண்​டிக்​கிறேன்.

ஜம்​மு-​காஷ்மீர் மத்​திய அரசின் நேரடிக் கட்​டுப்​பாட்​டில் இருந்​த​போது பயங்​கர​வாத சம்​பவங்​கள் இல்​லை. அங்கு புதிய அரசு அமைந்த பிறகு​தான் பயங்​கர​வாத சம்​பவங்​கள் அதி​கரித்​துள்​ளன. இந்​தி​யா​வில் ஒரே மதத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஏன் பயங்​கர​வா​தி​களாக உள்​ளனர் என்​பது தொடர்​பாக ப.சிதம்​பரம் பதில் கூற வேண்​டும்.

தமிழகத்​தில் வாக்​காளர் சிறப்பு தீவிர பணிக்கான படிவங்​களை திமுக​வினர் மொத்​த​மாக வாங்​கிச் செல்​கின்​றனர். தோல்வி பயத்​தால் சிறப்பு தீவிர திருத்​தத்தை திமுக எதிர்க்​கிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்​தலில் திமுக ஆட்சி அகற்​றப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x