Published : 14 Nov 2025 12:08 AM
Last Updated : 14 Nov 2025 12:08 AM
சென்னை: இணையதளம் மூலம் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2002,2005 -ன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதுதவிர, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதள மான https://voters.eci.gov.in- ல் கணக்கீட்டு படிவத்தை (Enum eration Form) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் “Fill Enumeration Form” என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.
இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் விவரங்களை நிரப்ப வேண்டும். பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்துக்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். கடவுச்சொல்லை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT