Published : 11 Nov 2025 06:16 AM
Last Updated : 11 Nov 2025 06:16 AM
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, காக்கிநாடா - கோட்டயம் சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, காக்கிநாடா டவுணில் இருந்து நவ.17, டிச.1, 8, 15, 22, 29, ஜன.5, 12, 19 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் (07109) இயக்கப்படும்.
மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து நவ.18, டிச.2, 9, 16, 23, 30, ஜன.6, 13, 20 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் (07110) இயக்கப்படும். இந்த ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். மகாராஷ்டிரா ஹசூர் சாஹிப் நாந்தேட்- கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரயிலும், தெலுங்கானா சார்லபள்ளி - கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (10-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இத்தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT