Published : 11 Nov 2025 06:46 AM
Last Updated : 11 Nov 2025 06:46 AM

எஸ்ஐஆர் விவகாரத்தில் கபட நாடகம் ஆட அதிமுக திட்டம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருச்சி சோமரசம்பேட்டையில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். படம்: ர.செல்வமுத்துகுமார்

எஸ்​ஐஆருக்கு எதி​ரான திமுக வழக்​கில் தங்​களை​யும் சேர்த்​துக் கொள்ள வேண்​டும் என்று அதி​முக சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் திடீரென ஒரு மனுவை தாக்​கல் செய்​துள்​ளனர். இதன் மூலம் அவர்​கள் ஒரு கபட நாடகத்தை நடத்​து​வதற்​காக திட்​ட​மிட்​டிருக்​கி​றார்​கள் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றம்​சாட்​டி​னார்.

திருச்சி ஸ்ரீரங்​கம் தொகுதி திமுக எம்​எல்ஏ பழனி​யாண்டி இல்​லத் திருமண விழா, சோமரசம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது. திரு​மணத்தை நடத்தி வைத்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: நம்மை அழிக்க எதிரி​கள் புதுப்​புது யுக்​தி​களை​யும், முயற்​சிகளை​யும் செய்து வரு​கி​றார்​கள். வரு​மான வரித் துறை, சிபிஐ போன்​றவற்றை ஏவி​னார்​கள். தற்​போது எஸ்​ஐஆர் என்​கிற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்​கப் பார்க்​கி​றார்​கள். ஆனால் ஒரு​போதும் திமுகவை அவர்​களால் அழிக்க முடி​யாது.

முத்​தரையர் சமு​தா​யத்​தினர் மீது கடைக்​கண் பார்​வையை திருப்​புங்​கள் என்று அச்​சமூகத்​தின் பிர​தி​நிதி செல்​வக்​கு​மார் பேசி​னார். கடைக்​கண் பார்வை மட்​டுமல்ல, எல்லா பார்​வை​யும் உங்​கள் பக்​கம் இருக்​கிறது. திரா​விட மாடல் ஆட்சி என்​பது எல்​லோருக்​கும் எல்​லாம் என்​பது தான். அனை​வ​ருக்​கு​மான ஆட்​சி​யாக இந்த ஆட்சி உள்​ளது.

எஸ்​ஐஆருக்கு எதி​ரான திமுக வழக்​கில் தங்​களை​யும் சேர்த்​துக் கொள்ள வேண்​டும் என்று அதி​முக சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் திடீரென ஒரு மனுவை தாக்​கல் செய்​துள்​ளனர். உங்​களுக்கு உள்​ளபடியே அதில் அக்​கறை இருக்​கிறது என்​றால், உங்​களு​டைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்​டும் என்று சொன்​னால், முன்​கூட்​டியே வழக்கை தொடுத்​திருக்​க வேண்​டும்.

பாஜகவோ, தேர்​தல் ஆணை​யமோ எதைச் சொன்​னாலும், அதை ஆதரிக்​கின்ற நிலை​யில் இன்​றைக்கு அடிமை​யாக உள்​ளார்​களே தவிர, அதை எதிர்க்க அதி​முக​வுக்கு துணிச்​சல் இல்​லை. இருந்​தா​லும், திமுக தொடுத்​திருக்​கக்​கூடிய வழக்​கில் தங்​களை இணைத்​துக் கொண்​டிருப்​ப​தன் மூலம் ஒரு கபட நாடகத்தை நடத்த திட்​ட​மிட்​டிருக்​கி​றார்​கள். அது​மட்​டுமல்ல, வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​(BLO) என்​பது, அங்கு இருக்​கக்​கூடிய அரசு ஊழியர்​களை வைத்து அந்​தப் பணி​களை செய்​வது. அவர்​களுக்கு உதவ, கட்சி சார்ந்த பிர​தி​நி​தி​களை வாக்​குச்​சாவடி முகவர்​களாக(BLA2) நாம் நியமிக்​கி​றோம்.

திமுக சார்​பில் வாக்​குச்​சாவடி முகவ​ருக்கு முறை​யாக பயிற்சி அளித்து நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அப்​படி நியமிக்​கப்​பட்​டிருப்​பது தவறு என்​றும், அதை நீக்க வேண்​டும்; அதை தடுக்​கவேண்​டும் என்​றும் சொல்​லி, அதை அடிப்​படை​யாக வைத்து அதி​முக​வின் சார்​பில் நீதி​மன்​றத்​தில் தங்​களை இணைத்​துக் கொண்​டிருக்​கி​றார்​கள்.

ஆனால் அது எடு​ப​டாது என்​பதை தெரி​வித்​துக் கொள்​கிறேன். டெல்​லி​யில் இருக்​கக்​கூடிய பிக் பாஸூக்கு பழனி​சாமி ஆமாம் சாமி போட்​டுத்​தான் ஆக வேண்டும். ஆனால், அதை​யும் தாண்டி மற்​றொரு காமெடி​யும் இன்​றைக்கு செய்​திருக்​கி​றார். இதையெல்​லாம் மக்​கள் பார்த்​துக் கொண்​டு​தான் இருக்​கி​றார்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ரூ.51 லட்​சம் நிதி: விழா​வில் ஸ்டா​லினிடம் ரூ. 51 லட்​சம் தேர்​தல் நிதி​யாக எம்​எல்ஏ பழனி​யாண்டி வழங்​கி​னார். அமைச்​சர்​கள் கே.என்​.நேரு,
மகேஸ் பொய்​யாமொழி, ரகுப​தி, மெய்​ய​நாதன், சிவசங்​கர், கீதா ஜீவன், எம்​.பி.க்​கள் அ.ரா​சா, திருச்சி சிவா, துரை வைகோ உள்ளிட்டோர் விழா​வில் பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x