Published : 10 Nov 2025 07:40 PM
Last Updated : 10 Nov 2025 07:40 PM

தெற்கு ரயில்வேக்கு மட்டும் 408 எல்எச்பி பெட்டிகளை தயாரித்து வழங்க ஐசிஎஃப் இலக்கு

சென்னை: தெற்கு ரயில்​வேக்கு 408 எல்​எச்பி பெட்​டிகளை தயாரித்து வழங்க ஐசிஎஃப் இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இந்​திய ரயில்​வேக்கு ரயில் பெட்​டிகள் தயாரிப்​ப​தில், பெரம்​பூர் ஐசிஎஃப் தொழிற்​சாலை முக்​கிய​மான​தாக இருக்​கிறது.

இங்கு காலத்​துக்கு ஏற்​றார்​போல, வந்தே பாரத், ‘ஏசி’ மின்​சார ரயில்​கள், ஜெர்​மன் தொழில் நுட்​பத்​தில், லிங் ஹாப்​மென் புஷ் என்ற நவீன எல்​எச்பி பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்​படு​கின்​றன. அதன்​படி, இந்த நிதி​யாண்​டில் 3,000-க்​கும் மேற்​பட்ட எல்​எச்பி பெட்​டிகளை தயாரித்​து, ரயில்​வேக்கு வழங்க உள்​ளது.

இதில், தெற்கு ரயில்​வேக்கு மட்​டும் 408 பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்பட உள்​ளன. இது​வரை 290 பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. மீத​முள்ள பெட்​டிகள் வரும் மார்ச் மாதத்​துக்​குள் வழங்​கப்​படும் என ஐசிஎஃப் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோ​சனைக் குழு உறுப்​பினர் ஜாபர் அலி கூறும்போது, ‘ராமேசுவரம், கொல்​லம், திருச்​செந்​தூர் உள்​ளிட்ட விரைவு ரயில்​களில் இருக்​கும் பழைய பெட்​டிகள் நீக்​கி​விட்​டு, எல்​எச்பி பெட்​டிகளாக மாற்ற வேண்​டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x